கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜிநாமா செய்துள்ளனர்.
அந்தக் குழுவின் புதிய தலைவராக ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர்.
கோப் குழுவிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன நேற்றுமுன்தினம் விலகியிருந்த நிலையில், அந்தக் குழுவில் அங்கம் வகித்த மேலும் அறுவர் நேற்று பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சரித்த ஹேரத், இரா.சாணக்கியன், ஹேஷா விதானகே, காமினி வலேபோட மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் கோப் குழுவின் பதவிகளிலிருந்து தாம் விலகுகின்றனர் என அறிவித்துள்ளனர்.