கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இன்று (01) விடுவிக்கப்பட்டார்.
முறையற்ற கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெளிநாடு செல்ல வருகை தந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர் இழுபறியில் இருந்து வந்த நிலையில், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம், விமல் வீரவன்ச எம்.பியை இன்று விடுதலை செய்து
உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தொடர்பான கடவுச்சீட்டு வழக்குகளும் உள்ளன.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து, போலி இராஜதந்திர கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட அவருக்கு எதிரான இரண்டு வழக்குகள் ஏற்கெனவே தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.