இணையங்கள் ஊடாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள “நிகழ் நிலைக்காப்புச் சட்ட மூலம்” அரசியலமைப்புக்கு முரணானது என பல எதிர்ப்புகள் உள்ளன.
இந்நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) ஒருவரை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட பதிவுக்காக பெண் ஒருவர் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் முன் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளார்.
களுத்துறையைச் சேர்ந்த லலந்தி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு சிறப்புரிமைக் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (01) அறிவித்துள்ளார்.
இலங்கையில் முதன்முறையாக இத்தகைய நிகழ்வு இடம்பெற்றவுள்ளது.
மேற்படி பெண், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தொடர்பில் கருத்து பதிவிட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.