0
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தூது அனுப்பி நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு உங்களுக்கு விருப்பமா என்று வினவியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ.
இந்தத் தகவலை தெற்கு ஊடகம் ஒன்று பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பஸில் ராஜபக்ஷ உள்ளார். ஏனைய கட்சிகள் அது தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் உள்ளன என்று அறிவதற்கு அவருக்கு விருப்பம்.
முதலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தூது அனுப்பி நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு உங்களுக்கு விருப்பமா என்று பஸில் வினவியுள்ளார்.
எனினும், எடுத்த எடுப்பிலேயே ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்று தூது கொண்டு வந்தவரிடம் சஜித் மற்றும் சம்பந்தன் தரப்பினர் செய்தி அனுப்பியுள்ளனர்.
– இப்படி அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.