1
“இந்தியாவில் நரேந்திர மோடி எப்படியோ அதுபோலவே இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இவ்விருவருமே தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வார்கள்.”
– இவ்வாறு இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“சவாலான சூழ்நிலையிலேயே இந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். அவர் இதற்கு முன்னர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால் இந்த நாடு சிறந்த நிலையில் இருந்திருக்கும். அதனை அவர் தனது செயல் மூலம் நிரூபித்துள்ளார்.
இந்தியாவில் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு இடம்பெற்று வருகின்றது. அந்தத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் மீண்டும் பிரதமர் ஆவார். அவர் இந்தியாவை நேசிக்கின்றார். இந்தியாவில் நரேந்திர மோடி போல்தான் இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார். அவர் நிச்சயம் ஜனாதிபதியாக வேண்டும்.” – என்றார்.