தனது சொந்தத் தேவைக்காக ஜனாதிபதியைச் சந்தித்துள்ள அவர், அதன்போது சமகால அரசியல் நிலைவரம் குறித்தும் பேசியுள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணிலுடன் சேர்ந்துகொண்டமைக்காக அவர்களைக் கட்சிப் பொறுப்புக்களில் இருந்து நீக்கியிருந்தார் மைத்திரி. அதையடுத்து மைத்திரிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை அவர் வகிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அப்படி இருந்தும்கூட, தனது சொந்தத் தேவைக்காக ஜனாதிபதியைச் சில நாட்களுக்கு முன் மைத்திரி சந்தித்துள்ளார்.
மைத்திரியின் இந்த இரட்டை வேடத்தை அவரால் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அந்த எம்.பிக்களே அம்பலப்படுத்தியுள்ளார்கள். – என்று அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.