செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணில் – சந்திரிகா இரகசிய சந்திப்பு! – கொழும்பு அரசியலில் பரபரப்பு

ரணில் – சந்திரிகா இரகசிய சந்திப்பு! – கொழும்பு அரசியலில் பரபரப்பு

1 minutes read
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் விசேட பேச்சு இடம்பெற்றுள்ளது.

இந்தப் பேச்சு, இந்தோனேசியாவுக்கு ஜனாதிபதி ரணில் விஜயம் மேற்கொண்டிருந்தபோது அங்கு சந்திரிகாவை அவர் சந்தித்தபோதே இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இருவருக்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசியல் மட்டத்தில் பேசப்படுகின்றது.

எனினும், அங்கு பேசப்பட்ட விடயம் குறித்து தகவல்கள் இரகசியாகமாகப் பேணப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ரணிலுடன் மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்றும் சென்றுள்ளது.

மேற்படி நால்வரும் பண்டாரநாயக்க ஆதரவாளர்கள் என்ற வகையில் அண்மைக்காலம் வரை முக்கிய நபர்களாக இடம் பிடித்திருந்த நிலையில் இவர்களுக்கு மேலதிகமாக ரணில் விக்கிரமசிங்கவுடன் நிமல் லான்சாவும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளார் என்று தற்போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, உலக நீர் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் இந்தோனேசியாவுக்குச் செல்வது தொடர்பில் ஆரம்பம் முதலே அரசியல் அவதானிகள் கவனம் செலுத்தியிருந்தனர் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More