1
பிரபஞ்சம் திறன் வகுப்பறைகளை வழங்கும் திட்டத்தின் 321 ஆவது கட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் வன்னித் தேர்தல் மாவட்டம், மன்னார், தேவன்பிட்டிய றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி. மற்றும் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.