மோட்டார் சைக்கிளில் அவருடன் பயணித்த மகள் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயையும் மகளையும் வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தையடுத்து வாகனத்தின் சாரதியும் மற்றுமொரு நபரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் வாகனத்தில் இருந்த இரு இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.
வாகனத்தில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்தனர் எனவும், சாரதியைப் பொலிஸார் விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் வீதியில் கூடிய வலியுறுத்தியதுடன் பொலிஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அவ்விடத்தில் சில மணி நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளையும் ஹயஸ் வாகனத்தையும் பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, தப்பியோடிய ஹயஸ் வாகனத்தின் சாரதியையும் மற்றைய நபரையும் கைது செய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.