2
பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளதால் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ நாடு திரும்பியதையடுத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் கடமையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.