18
மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தினார் என்று வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
அண்மையில் மன்னார், தம்பன்னை குளத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வந்த வைத்தியர் அர்ச்சுனா, வைத்தியசாலை செயற்பாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு இன்று பிற்பகல் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் உத்தரவிட்டார்.