ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ராஜபக்ஷக்கள் பக்கம் தற்போது எஞ்சியிருக்கும் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருடன் அரச தரப்பு பேசுவதற்கு முடிவெடுத்துள்ளது என்று அறியமுடிகின்றது.
இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியுள்ளார் என்றும் அந்தத் தகவல் மேலும் கூறுகின்றது.
மேற்படி 20 எம்.பிக்களும் மஹிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தீவிர விசுவாசிகள் என்றும் தெரியவந்துள்ளது.