மேற்படி இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கு ஆதரவளித்தனர்.
இதனையடுத்து ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அவர்கள் இருவரையும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியிருந்தது.
இதற்கு எதிராக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டரீதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு மனு நிராகரிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காரணமாக மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளனர்.
இதையடுத்து ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தங்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளனர்.