இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள் தமது அலுவலகங்களிலுள்ள உறுதிப்படுத்தல் அதிகாரிகளின் முன்னிலையில் வாக்களிக்க முடியும் என்றும், இந்த 3 தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.