செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியாது! – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியாது! – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

1 minutes read
“வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும், தெற்காக இருந்தாலும், மலையகமாக இருந்தாலும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்குரிய உரிமை உள்ளது. இதற்கு நாம் எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தவில்லை. நினைவேந்தல் நிகழ்வை எவரும் தடுத்து நிறுத்த முடியாது.”

– இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

“தடை செய்யப்பட்ட தமது பிள்ளைகளை, உறவுகளை அவர்களின் சொந்தங்கள் நினைகூரும்போது அவர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர் எனக் காட்ட முற்படவும் கூடாது.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். அந்த அமைப்பின் இலட்சினை, படங்களைப் பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வை நடத்த இடமளிக்க முடியாது.” – என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களிடம் மேலும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More