4
வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 7 பேரிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகள் பலவற்றில் எலிக்காய்ச்சலுக்கான லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரி மற்றும் சிறுநீரக மாதிரி என்பன தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் மாதிரிகள் பலவற்றில் எலிக்காய்ச்சலுக்கான லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவி வரும் இந்த எலிக்காய்ச்சல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.