இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவுப் பகுதியில் இளைஞர் ஒருவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று காணாமல்போயுள்ளது.
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை விடுமுறையில் வீடு செல்வதற்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்குப் படகில் வந்து இறங்கிய வேளையில், அவரது கையில் சந்தேகத்துக்கிடமான முறையில் ரெஜிபோம் பெட்டி காணப்பட்டது.
அது தொடர்பில் படகில் வந்த இளைஞர்கள் கடற்படையினருக்குத் தகவல் வழங்கி அந்தப் பெட்டியைச் சோதனை செய்தபோது, அதற்கு ஒரு தொகை இறைச்சி காணப்பட்டது.
நெடுந்தீவில் காணாமல்போன ஆட்டை இறைச்சியாக்கிப் பொலிஸ் உத்தியோகத்தர் எடுத்துச் செல்வதாக இளைஞர்கள் குற்றஞ்சாட்டினர்.
அதனால் மீட்கப்பட்ட இறைச்சியையும், பொலிஸ் உத்தியோகத்தரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறைப் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட இறைச்சி, ஆட்டிறைச்சியா என்பதைக் கண்டறிந்த பின்னரே மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.