வவுனியா இறம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியக் கிளையின் பத்தாவது ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இலண்டனில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இதன்போது பிரித்தானியாவில் வசிக்கும் பெருமளவான பழைய மாணவிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இதேவேளை தாயகத்தில் இருந்து வவுனியா இரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலய சமூகத்தினர் சார்பில் நிகழ்வுக்கு வாழ்த்துகள் மெய்நிகர் தொடர்பாடல்மூலம் வழங்கப்பட்டது.