செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய வேண்டும்”

“தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய வேண்டும்”

1 minutes read

“தமிழ் அரசியல் கைதிகளைத் தேசிய மக்கள் சக்தி அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அவர்களை இந்த அரசு மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும்.”

– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

“தமிழ் அரசியல்  கைதிகள் விடுதலை விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அழுத்தம் ஏன் குறைவாகக் காணப்படுகின்றது?” – என்று ரஞ்சித் மத்தும பண்டார எம்.பியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“சிறைச்சாலைகளில் தற்போது குறைந்தளவு தமிழ் அரசியல் கைதிகளே உள்ளனர் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளார்கள். எனவே, அவர்களை இந்த அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித  ஆட்சேபனையும் இல்லை.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு எமது கட்சியின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகளை மிக விரைவில் விடுதலை செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More