ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக் ஓயா பகுதியில், திருடப்பட்ட முச்சக்கரவண்டியின் பாகங்கள் மற்றும் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் நேற்று சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 27 வயதுடைய திக் ஓயா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடம் இருந்து, திருடப்பட்ட முச்சக்கரவண்டியின் பாகங்கள் மற்றும் 08 கிராம் 780 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த முச்சக்கர வண்டியின் பாகங்கள் குறித்த சந்தேக நபர்களால், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் திருடப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த திருட்டுச் சம்பவத்திற்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.