வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவது தொடர்பிலோ போதைப்பொருள் பயன்பாடுகளை நிறுத்துவதற்கோ விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதன் விளைவே மக்கள் துன்பங்களை சந்தித்துவருகிறார்கள் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை சுழிபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் சந்திரசேகர் இதனை தெரிவித்தார்.
அமைச்சர் சந்திரசேகர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கல்விக்கு சிறந்த பெயர் பெற்ற இடமான யாழ்ப்பாணத்தில் இன்று துர்நடத்தைகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன?
கலை கலாச்சாரம் கட்டிக் காத்த யாழ்ப்பாணத்தில் ஏன் இத்தகைய நிலை. ஜனாதிபதித் தேர்தலுக்காக நாம் வீடு வீடாகச் சென்றபோது இங்கு இடம்பெற்று வருகின்ற கசிப்பு உற்பத்தியை நிறுத்த வேண்டும்.
போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை நிறுத்த வேண்டும் என்றே கேட்கிறார்கள் போதை பொருள் கடத்தல் ,பயன்பாடுகளை அதிகரித்துள்ளமையை நிறுத்தவேண்டும்.
வாள் வெட்டு அச்சறுத்தல்கள் இடம்பெற்று வருகிறது. இங்குள்ள ஒரு சில பொலிஸ்காரர்கள் அட்டுழியங்கள் அதிகரித்துள்ளது .
போதைவஸ்துக் காரர்களுடன் பொலிசார் தொடர்பில் இருக்கின்றார்கள் இவைகளுக்கு கூடிய சீக்கிரம். முடிவுகளை எடுத்து எங்களுடைய சமூகத்தை மீட்டு எடுக்க வேண்டும்.
யாழ்ப்பாணம் ஏன் இந்தப் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளத என்பதை நாம் தேடிப் பார்க்கவேண்டும் இங்குள்ள குடும்பங்கள் சமூக ரீதியாக இன ரீதியாக மத ரீதியாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளது.
இவை எல்லாவற்றக்கும் காரணம் அரசியல் வாதிகளும் காரணமாகின்றர்கள் எந்தவொரு அரசியல்வாதியும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
போதைப்பொருளில் இருந்து மீள்வதற்கு வழிப்பணர்வு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை இன்றுள்ள பெரிய சவாலாக சீரழிந்துள்ள அசுத்தமடைந்துள்ள நாட்டை ஒற்றுமையான நாடாக கட்டியெழுப்பப்படவேண்டும்.
இதற்காககத்தான் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த நாட்டை சுத்தப்படுத்துவது மட்டுமன்றி அனைவரது மனங்களையும் சுத்தப்படுத்தவேண்டும்.
போதைப் பொருளிளன் கீழ் முழுச் சமூகமும் சீரளிக்கப்பட்டுள்ளது மது பாவனை காரணமாக யாழ்மாவட்டம் முதல் இடத்திலுள்ளது உலகத்தில் குடிகார நாடாக இலங்கை உள்ள இடத்தில் இருந்த போது இலங்கையில் நுவரெலியா மாவட்டம் அதிக குடிகாரர் உள்ள மாவட்டமாக இருந்தது இன்று அதிக குடிகாரர் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் உள்ளது.
யுத்தத்திற்கு பின்னரான சூழலில் பாதிப்படைந்த மக்களை வறுமையும் சேர்ந்து வாட்டுகிறது. இதன் காரணமாக நூண்நிதி கடன் களை பெற்று அதனைக் கட்டமுடியாதவர்களாக தற்கொலை செய்தவர்கள் அதிகமாகவுள்ள இடமாக வன்னி மாவட்டம் உள்ள்து.
இவ்வாறாக தொடர் பாதிப்புகளை வடக்கு மாகாணம் சந்தித்துகொண்டிருக்கிறது இங்கு மட்டுமல்ல முழு இலங்கையுமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த நாட்டை மாறிமாறி ஆட்சியிலிருந்தவர்களால் இந்த நிலையேற்பட்டது. நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் அதற்காவே உங்கள் வாக்குகளும் எமக்கு கிடைத்துள்ளது இதனால் தான் இந்த நாட்டை சுத்தப்படுத்த வேண்டும்.
நாம் எமது பதவியேற்பு ,சுதந்திர தினம் போன்றவற்றிற்கு ஆடம்பர செலவு இல்லாது மிக எளிமையான அவற்றை செய்து காண்பித்தோம். நாம் எவற்றை செய்வோம் என்பதை கூறினோமோ அவற்றை செய்து உண்மையான மாற்றத்தை எற்படுத்துவோம் என்றார்.