“தேசநேத்ரு”, “கலாசூரி” அருந்ததி ஸ்ரீ ரங்கநாதனின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று (28) நண்பகல் அன்னாரின் புதல்வர்களான சாரங்கன் ஸ்ரீரங்கநாதன், சியாமளாங்கன் ஸ்ரீ ரங்கநாதன், ஸ்ரீ ஹரன் ஸ்ரீ ரங்கநாதன் முன்னிலையில் அஞ்சலிக்காக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு வரவேற்பு மண்டபத்தில் வைக்கப்பட்டது.
இதன்போது அங்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் உதித்த கயா சான் குணசேகர தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், இந்திய கலாசார நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி அங்குரன் தத்தா, உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட், புதிய அலை வட்டம் நிறுவனர் ராதாமேத்தா, கருப்பையா பிள்ளை பிரபாகரன், பாடகர் முத்தழகு, முருகேஸ்வரி, சிரேஷ்ட கலைஞர் ராஜா கணேசன், க.நாகபூசணி முதலானோர் நேரில் சென்று அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அஞ்சலி உரையும் ஆற்றினர்.
அதனை தொடர்ந்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2) காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை கொழும்பு 6இல் அமைந்துள்ள அருந்ததி ஸ்ரீ ரங்கநாதனின் இல்லத்தில் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்படும்.
அதன் பின்னர், அன்னாரின் பூதவுடல் பொரளை மயானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)