செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டில் மதுபான பாவனையினால் வருடத்துக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு

நாட்டில் மதுபான பாவனையினால் வருடத்துக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு

1 minutes read

இலங்கையில் மதுபான பாவனை காரணமாக வருடத்துக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அத்துடன் நாளொன்றுக்கு 40 முதல் 45 பேர் உயிரிழக்கின்றனர் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பிரதிநிதி எம்.நிதர்சனி (ADIC) தெரிவித்தார்.

கொழும்பு 5 இல் உள்ள மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையில் மதுபானம் பாவனையினால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் நிதர்சனி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

இலங்கையில் 2022ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு மதுபானம் மற்றும் புகைத்தல் பாவனைக்காக தினமும் 121 கோடி ரூபா செலவிடப்படுகின்றது, 2022 ஆம் ஆண்டில் மதுபான வரி வருமானம் மற்றும் மதுபான பாவனையினால் ஏற்படும் பொருளாதார மற்றும் சுகாதார செலவீனம் 237 பில்லியன் ரூபாவாகும்.

மேலும் 2023ஆம் ஆண்டில் மதுபானத்திற்கான வரியை 20 வீதத்தால் அதிகாரித்தமையினால் நாட்டின் மதுபான வரி வருமானம் 11.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்ததுடன் மதுபான பாவனைகளும் குறைவடைந்தன.

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடுதலான மதுபானசாலைகள் உள்ளன.

மதுபான நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 60 கோடி ரூபா வருமானம் மீட்கின்றனர். இந்தக் தொகையை நாளாந்தம் ஈட்டிக் கொள்வதற்காக உங்களது பிள்ளைகளும் இலக்காகும். இவற்றுக்கு உதாரணம் பாடசாலைகளுக்கிடையே நடைபெறுகின்ற பிக் மெச் விளையாட்டாகும். இதிலிருந்து மாணவர்கள் மதுபானம் அருந்தப் பழகுகின்றனர்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், யுவதிகள் விரும்புகின்ற நடிகர் நடிகைகள் மதுபானம் அருந்துவது போன்று சினிமாவில் காட்டப்படுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிரச்சாரங்களும் அறிவித்தல்களும் வெளியிடுகின்றனர். சிறிய பிள்ளைகள் பார்க்கின்ற கார்ட்டூன்களில் கூட மதுபானம் பாவனைக்கான பிரச்சாரங்களுக்கு சந்தர்ப்பங்கள்.  தொலைக்காட்சி நாடகங்கள் திரைப்படங்களில் மதுபான பாவனையை கவர்ச்சிகரமாக காட்டுதல். மதுபானம் பாவனையில் உண்மைக்குப் புறம்பான விஷயங்களை தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்கின்றனர் .

கவலை ஒன்று பிரச்சினை ஒன்று ஏற்படுகின்றபோது மதுபானம் அருந்தி காட்டுவது, ஒருவர் உபசாரத்தில் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் மதுபான போத்தலின் மூடியை திறந்து சியர்ஸ் செய்வது, தற்காலத்தில் பெண்களும் மதுபானம் பாவிப்பதாக காண்பித்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மதுபானத்தை ஊக்குவிக்கின்றன.

மதுபானம் அருந்திவிட்டு செய்யும் போலியான நடிப்புக்கலை பெண்கள் இனியும் அனுமதிக்கப் போவதில்லை ஒன்று கூடுவோம் மாற்றியமைப்போம் என  சர்வதேச மகளிர் தின மார்ச் 8 விழாவில் 24 மாவட்டங்களிலும் பெண்கள் ஒன்றுகூட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More