மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு 38 மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (11) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவினை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களில் 38 மாணவர்களுக்கு நோய் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் 38 மாணவர்களுக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களில் 26 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினால் வைத்தியசாலை வளாகத்தினுள் பெற்றோர்களும் பிரதேசவாசிகளும் உட்பிரவேசித்ததில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை உணவு மாதிரிகள் மற்றும் பாடசாலை குடிநீர் மாதிரிகள் பெறப்பட்டு, பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.