முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த குணசிங்கம் மதுசன் (வயது 28) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவில் கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த மேற்படி இளைஞர், முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மேற்படி இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.