இறுதிப் போரில் இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவுக்கு நீதி வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டமையை நாமும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதேவேளை, இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எமது தமிழ்ப் பெண்களுக்கான நீதி எங்கே?
இது தொடர்பில் இந்த அரசின் நடவடிக்கைதான் என்ன? இசைப்பிரியாவுக்கு நீதி கிடைக்குமா?” – என்று சாணக்கியன் எம்.பி. மேலும் உரையாற்றினார்.