வெடிமருந்து மற்றும் துப்பாக்கியுடன் இளைஞர்கள் இருவர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, பொரளை பொலிஸ் பிரிவின் ஓவல் மைதானத்துக்கு அருகில் வெடிமருந்துகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து ரி – 56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் வெடிமருந்தும் மற்றும் எல்.எம்.ஜி. வெடிமருந்தும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கோமரன்கடவல, கஜுவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ரி – 56 ரக துப்பாக்கியை வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.