சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
43 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இந்தியாவிலிருந்து நேற்றைய தினம் பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 840 வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் 55 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.