இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுப்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் அறிவித்துள்ள தடைகள் ஒரு தலைப்பட்சமானவை என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதனால் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது
வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சு இலங்கையின் உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கான பிரிட்டனின் தடைகள் என வெளியிட்ட செய்திக்குறிப்பினை வெளிவிவகார அமைச்சு கருத்தில்கொண்டுள்ளது.
பிரிட்டிஸ் அரசாங்கம் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது இவர்களில் மூவர் இலங்கையின் முன்னாள் இராணுவதளபதிகள் கடற்படை தளபதி.
காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள் என்ற அர்ப்பணிப்பு என வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பையும் நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்.
இந்த அடிப்படையில் இது குறிப்பிட்ட தனிநபர்களின் சொத்துக்களை முடக்குதல்,போக்குவரத்து தடை ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிட்டனின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என நாங்கள் வலியுறுத்தவிரும்புகின்றோம்.
இவ்வாறன ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவாது மாறாக .இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை குழப்பமானதாக்கும்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பொறிமுறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது,கடந்த காலத்தின் எந்த மனித உரிமை மீறல்களும் உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை ஊடாகவே கையாளப்படவேண்டும்.
இலங்கையின் இந்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரி;க்கிடம் எடுத்துரைத்துள்ளார்.