கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அனைத்து மாவட்டங்களிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தங்கள் கைகளினால் இராணுவத்தினரிடம் கையளித்த தங்களது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரியும், சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.