செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித்துக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறை!

முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித்துக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறை!

1 minutes read
வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி ஷாந்தி சந்திரசேன ஆகியோருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை 16 ஆண்டுகள் கடூழியச்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு  ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முன்னெடுத்த நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எஸ்.எம். ரஞ்சித் வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சராகச் செயற்பட்டபோது அவரது தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய ஷாந்தி சந்திரசேன முறையற்ற விதத்தில் இலாபமீட்ட இடமளித்தமை, எரிபொருள் கொடுப்பனவு சம்பளத்துடன் வழங்கப்பட்ட நிலையிலும் எரிபொருள் கொள்வனவு வவுச்சரின் ஊடாக 26  இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை வழங்கியமை, அவ்வாறு வழங்குவதற்கு அரச அதிகாரிகளைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளன.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தமது தீர்ப்பை அறிவித்த நீதிபதி சந்தேகநபர்களுக்கு எதிரான முறைப்பாட்டின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

இதற்கமைய இலஞ்ச, ஊழல் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய ஊழல் குற்றத்தை இழைத்தமைக்காகச் சந்தேகநபர்கள் இருவரையும் குற்றவாளிகளாகத் தீர்மானித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனையை அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் தம்பியே எஸ்.எம். ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More