முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டுள்ள பிள்ளையானுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள விரும்பினார் எனவும் அதற்கு சி.ஐ.டி.யினர் அனுமதி வழங்கவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இது தொடர்பில் சி.ஐ.டி.யினரை தொடர்புகொண்டார், முன்னாள் ஜனாதிபதி பிள்ளையானுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள விரும்பினார் எனினும் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்வது சட்டவிரோதமானது என்பதால் அதற்கு அனுமதி வழங்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிள்ளையானை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த சந்திப்பு சி.ஐ.டி. அலுவலகத்தில் சி.ஐ.டி.யினரின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.