பெலியத்த, ஹெட்டியாராச்சி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பஸ், எதிர்த் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த பயணிகள் தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.