2
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதான மே தின எழுச்சிக் கூட்டம் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் யாழ்ப்பாணம் – வீரசிங்கம் மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றும் இந்த மே தினக் கூட்டத்தில் அனைத்து தொழிலாளர்களையும், ஆதரவாளர்களையும் கலந்துகொள்ளுமாறு கட்சியின் தலைமைப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது.