கிளப் வசந்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இலங்கை பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
‘லொக்கு பெட்டி’ எனப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா என்ற பிரதான சந்தேகநபரே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:43 மணியளவில் டுபாயிலிருந்து வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பெலாரஸில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவுக்குச் சென்ற சுரேந்திர வசந்த பெரேரா எனும் கிளப் வசந்த என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான லொக்கு பெட்டி கொலை செய்யத் திட்டம் தீட்டி பணம் கொடுத்தார் என்று சந்தேகிக்கப்படுகின்றது.