1
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கட்சிக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவரது கொழும்பு விஜேராம இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.