வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களுக்காகமக் குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் டி.ஐ.ஜெயவர்த்தன உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.