யாழ்பல்கலைக்கழக வவுனியா கலைப்பீடமாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதான தபால்நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்றது.
தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பரிமாறி தமிழ்மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் , வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில் 11 மணியளவில் வவுனியா தபால்நிலையத்திற்கு முன்பாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, வலிந்துகாணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா இலுப்பையடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில், பொதுமக்கள் பலர் உணர்வுபூர்வமாக வருகைதந்து கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.