இன்று 15.05.2025 கிழக்கிழங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட் டில் இன அழிப்பு வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கப்பட்டது. இந் நிகழ்வானது மட்டக்களப்பு கல்லடி கன்னகி அம்மன் கோயி ல் முன்னால் நடைபெற்றது.
நிகழ்வில் கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றிய தலைவர் லோகநாதன் குருக்கல் ,செயலாளர் குகன் ஐயா ,மற்றும் உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட் டாளர்கள் ஒன்றிய தலைவர் ச.சிவயேகநாதன் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டதுடனர்.
இறுதியாக ஊடகச் சந்திப்பும் இடம்பெற்றது. அத்துடன் நேற்றைய தினம் மட்டக்களப்பு குடும்பிமலைப் பிரதேசத்தில் வைத்து தாக்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிட்சை பெற்று வரும் இருதயம் செல்வகுமார் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற் கும் கண்டணம் தெரிவிக்கப் பட்டது.