முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகே கடமையாற்றியபோது, தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்துக்குப் பணம் செலுத்தியமை தொடர்பில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜரானதைத் தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.