முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிவான் இந்த வழக்கின், மற்றுமொரு சந்தேகநபராக கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவின் பெயரைக் குறிப்பிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காகக் கடந்த 7ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியபோது ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.