சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மதுரையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் ஆர்ப்பாட்டம்
26.12.20 / மதுரை
நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும், சமையல் எரிவாயு சிலிண்டரின் தொடர் விலை உயர்வை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இன்று நடைபெற்றது.
மாவட்ட தலைவி கதிஜா பீவி, தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சமீமா வரவேற்றார்.
எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட பேச்சாளர் பிலால்தீன்,
திமுக மதுரை வடக்கு மாவட்ட துணை தலைவர் வழக்குரைஞர் ஜவஹர், காங்கிரஸ் கமிட்டி மதுரை மாவட்ட தலைவர் கார்த்திகேயன், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மதுரை மாவட்ட தலைவி சிராஜ் நிஷா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய மாநில செயலாளர் பாத்திமா கனி பேசியதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தால் பாதிப்புள்ளாகி இருக்கும் நடுத்தர மக்கள், ஏழைகள் மற்றும் குடும்ப பாரங்களைச் சுமக்கும் பெண்கள் ஆகியோரின் அவசியத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் மீது சுமத்தப்பட்டிருக்கும் 100 ரூபாய் விலையேற்றத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
என வலியுறுத்தினார்.
இறுதியாக மாவட்ட துணை தலைவி ஆபிதா பேகம், நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.
- செய்யது இப்ராஹிம் கனி