செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விவேக்கின் அஸ்தியில் கூட அவரது ஆசையை நிறைவேறியுள்ள குடும்பத்தினர் குளிர்ந்திருக்கும்.

விவேக்கின் அஸ்தியில் கூட அவரது ஆசையை நிறைவேறியுள்ள குடும்பத்தினர் குளிர்ந்திருக்கும்.

1 minutes read

தமிழக மக்களால் இருந்த சின்னக் கலைவானர் என்று போற்றப்பட்ட நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக்.

நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

விவேக்கின் உடல் விம்ருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது இதற்கு பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். இதையும் பாருங்க : அட, மைனாவின் கணவர் யோகேஷ் இந்த பழம் பெரும் நடிகரின் பேரனாம். (எம் ஜி ஆர் முதல் ரஜினி படத்தில் எல்லாம் நடித்தவர்) – Advertisement – மேலும், அவரது உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. விவேக் இருந்த போது கிரீன் கலாம் மூலம் 1 கோடி மரங்களை நட வேண்டும் என்பதை ஒரு இலக்காக கொண்டுவந்தார். இதுவரை அவர் 30 லட்சத்துக்கும் மேலான மரங்களை நட்டு இருந்தார்.

விவேக் இறந்து 10 நாட்கள் ஆன நிலையில் அவரது குடம்பத்தினர் அவருக்கு ஈம காரியங்களை செய்தனர். அதிலும், விவேக்கின் அஸ்தி அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் விவேக்கின் அஸ்தியை வைத்து அதற்கு குடும்பத்தினர் மரியாதை செய்தனர்.

அதன்பின்னர் அங்கு தோண்டப்பட்ட குழியில் விவேக்கின் அஸ்தியை வைத்து மலர் தூவி உறவினர்கள் அதன்மீது மரக்கன்றுகளை நட்டனர்.விவேக்கின் கனவே 1 கோடி மரங்களை நடுவது தான். இப்படி இருக்க அவரது அஸ்தியிலும் ஒரு மரக் கன்றை வைத்து அவரது ஆத்மாவை குளிர வைத்துள்ளனர் குடும்பத்தினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More