தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
* தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* வடகிழக்கு பருவமழை, மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
* பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
* கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.