இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
2022-23 கல்வியாண்டில் 8 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், உதயராஜ் என்பவரின் மகள் திரித்துஷா கூடல்நகர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் ஆர்ட்ஸ் பிரிவில் பயின்று 591 மதிப்பெண் எடுத்துள்ளார். தமிழில் – 97, ஆங்கிலத்தில் – 96 எக்கனாமிக்ஸ் – 99 , வணிகவியல் 99, கணக்குப்பதிவியல் – 100, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் – 100 என மொத்தம் 591 மதிப்பெண் பெற்றுள்ளார். 2022-23 கல்வியாண்டில் 8 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், உதயராஜ் என்பவரின் மகள் திரித்துஷா கூடல்நகர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் ஆர்ட்ஸ் பிரிவில் பயின்று 591 மதிப்பெண் எடுத்துள்ளார்.
தமிழில் – 97, ஆங்கிலத்தில் – 96 எக்கனாமிக்ஸ் – 99 , வணிகவியல் 99, கணக்குப்பதிவியல் – 100, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் – 100 என மொத்தம் 591 மதிப்பெண் பெற்றுள்ளார். “பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. ஆனால், அகதிகள் முகாமில் உள்ளதால் எங்களால் படிக்க முடியாது. அதனால் வணிகவியல் படித்துள்ளேன். ஆடிட்டராக வேண்டும் என்பது எனது விருப்பம்” என திரித்துஷா தெரிவித்துள்ளார். “பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்று தான் எனக்கு ஆசை.
ஆனால், அகதிகள் முகாமில் உள்ளதால் எங்களால் படிக்க முடியாது. அதனால் வணிகவியல் படித்துள்ளேன். ஆடிட்டராக வேண்டும் என்பது எனது விருப்பம்” என திரித்துஷா தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாணவி திரித்துஷாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவருக்கு பரிசுகளும் வழங்கினர். மேலும், மாணவியிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்படிப்பிற்கான கல்வி உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாணவி திரித்துஷாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவருக்கு பரிசுகளும் வழங்கினர். மேலும், மாணவியிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்படிப்பிற்கான கல்வி உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.