அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை மைக்கல் சூறாவளியினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 03.10.2018 புதன்கிழமை இரவு இந்த சூறாவளி தாக்க ஆரம்பித்தது.
மணிக்கு 250 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் வீசிய இந்த சூறாவளியின் காரணமாக, ஃப்ளோரிடாவில் வசிக்கும் பலரது வாழ்க்கை நிரந்தரமாக மாறிவிட்டது என்று அந்த மாநிலத்தின் ஆளுனர் ரிக் ஸ்கொட் தெரிவித்துள்ளார்.
பல குடும்பங்கள் அனைத்தையும் இழந்துவிட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சூறாவளியின் காரணமாக 6 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல இடங்களில் பெருமளவான மரங்கள் முறிந்து வீழ்ந்திருப்பதுடன், மின்சார விநியோகமும் தடை பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தின் முன்னெச்சரிக்கையாக 3 லட்சத்து 70 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருந்த போதும், பலர் அதனை புறக்கணித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.