அமெரிக்காவின் ஹார்ட்போர்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற போயிங் பி -17 என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 2 ஆம் உலகப்போரில் ஜெர்மனி படையினருக்கு எதிராக குண்டுகளை வீசிய போர் விமானமே இவ்வாறு 13 பயணிகளுடன் பயணித்துள்ளது.

குறித்த போர் விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் திடீரென தரையிறங்க முயற்சித்துள்ளது. இந்நிலையில் குறித்த விமானம் தரையில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.விமானம் விபத்திற்குள்ளானதில் பிராட்லி சர்வதேச விமானத்தில் உள்ள பராமரிப்பு நிலையம் ஒன்றின் மீது மோதியுள்ளது.

இவ்விபத்திலேயே 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். சம்பவத்தின்போது விமானத்தில் 3 விமானிகள் மற்றும் 10 பயணிகள் இருந்துள்ளனர்.

அத்தோடு கடந்த 1987 ஆம் ஆண்டு இவ் விமானம் சாகச நிகழ்வொன்றில் பங்குபற்றிய போது விபத்துக்குளானதில் பலர் கயமடைந்ததோடு , விமானமும் சேதமடைந்திருந்தது.

இந்நிலையிலலேயே மீண்டும் குறித்த விமானம் சரி செய்யப்பட்டு சேவைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் விபத்தில் சிக்கி தரையில் விழுந்து தீ பற்றி எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.