அமெரிக்காவின் டெக்சாஸ், ஓக்லகாமா மாநிலங்களில் பயங்கரச் சூறாவளிக் காற்றால் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஓனலாஸ்கா என்னுமிடத்தில் திடீரெனப் பயங்கரச் சூறாவளி வீசியது. இதில் அலைக்கழிக்கப்பட்ட ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன.
ஒரு சில இடங்களில் கூரைத்தகடுகளையும் பெயர்த்தெறிந்தது. இந்தச் சூறாவளியில் 3 பேர் உயிரிழந்தனர். குறைந்தது இருபது பேர் காயமடைந்தனர்.இதேபோல் ஓக்லகாமா மாநிலத்தில் இருவரும், லூசியானாவில் ஒரு பெண்ணும் சூறாவளியால் உயிரிழந்ததாக உள்ளூர்ச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சூறாவளியால் மின் கட்டமைப்புகள் சேதமடைந்ததில் டெக்சாசில் ஒன்பதாயிரம் பேரும், ஓக்லகாமாவில் ஏழாயிரம் பேரும் மின்துண்டிப்பால் பாதிக்கப்பட்டனர்.