லண்டனில் கருப்பினத்தவருக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை ஆர்ப்பாட்டக்கரர் ஒருவர் தரையில் முட்டித்தள்ளிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் சம்பவத்தின் போது இரு பெருநகர காவல்துறை அதிகாரிகள் தங்கள் ரேடியோக்களில் பேசிக் கொண்டு நின்றுள்ளனர்.
அப்போது அந்த வழியாக கடந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர், பொலிசாருக்கு எதிராக முழக்கமிடுவதும், அவர்கள் மீது குப்பையை வீசுவதுமாக கடந்து சென்றுள்ளனர்.
திடீரென்று ஒரு ஆர்ப்பாட்டக்காரர் அந்த இரு அதிகாரிகளில் ஒருவரை பக்கவாட்டில் பலமாக உதைத்து, பாராளுமன்ற கட்டிடத்தின் அருகிலுள்ள நடைபாதையில் தள்ளிவிட்டுள்ளார்.
அந்த நிகழ்வை எஞ்சியவர்கள் ஆரவாரமுடன் ஆதரித்ததுடன், பலர் கைதட்டி ஊக்குவித்துள்ளனர்.
தரையில் விழுந்த அந்த அதிகாரி சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்றதுடன், தனது தொப்பியையும் மீட்டுள்ளார்.
இதனிடையே தங்களுக்கு சுற்றும் நின்று ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை இன்னொரு அதிகாரி அதட்டியபடி நின்றுள்ளார்.
உடனே ஒரு கருப்பின இளைஞர் அந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக தமது கரங்களை விரித்து, ஆர்ப்பாட்டக்கரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நின்றுள்ளார்.
புதன்கிழமை ஹைட் பார்க்கில் முன்னெடுக்கப்பட்ட கருப்பின ஆதரவு போராட்டத்தில் சுமார் 15,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
பாடகர்களான துவா லிபா மற்றும் லியாம் பெய்ன் உட்பட பல பிரபலங்கள் இந்த நிகழ்வில் காணப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியதால், சமூக விலகலுக்கு வாய்ப்பில்லை என்பதால், இந்த ஆர்ப்பாட்டம் கொரோனா வைரஸின் பரவலைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தின.
#London #Protest #அமெரிக்கா #கறுப்பினம் #