நியூசிலாந்தில் இனபாகுபாடுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் போலீஸ் அதிகாரி முட்டியால் கழுத்தை மிதித்ததில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் மரணமடைந்தையடுத்து பல நாடுகளில் இனவெறிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
அந்த வகையில் நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்காவுக்கு மட்டுமின்றி, இனவெறி உலகளாவிய பிரச்சனை என்று கூறி கண்டன பதாகைகளுடன் பேரணி மேற்கொண்டனர்.